கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் போலி கணக்கு - பணம் பறிக்க முயற்சி - ரசிகர்கள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் அவரது எக்‍ஸ் தள பக்கம் போல் போலி கணக்கை தொடங்கி பணம் பறிக்க சிலர் முயன்றுள்ளனர்.

தோனியின் படம் வைக்‍கப்பட்டுள்ள அந்த பக்‍கத்தில் தாம் பணப்பையை கொண்டு வர மறந்துவிட்டதாகவும், அதனால் ராஞ்சியின் புறநகர் பகுதியில் தவிப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. தனது தனிப்பட்ட phone pe கணக்‍குக்‍கு 600 ரூபாய் அனுப்புமாறும், தான் ராஞ்சி சென்றவுடன் அந்த பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதைப்படித்த தோனி ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தோனியின் அதிகாரபூர்வ கணக்‍கு முகவரி போன்று போலியாக உருவாக்‍கப்பட்ட இந்த கணக்‍கை பார்த்து ரசிகர்கள் விழிப்புடன் இருக்‍குமாறு பயனர்கள் பலரும் எச்சரித்துள்ளனர். 

Night
Day