கிளாசிகல் செஸ் போட்டி : கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிளாசிகல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் வீரரான கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா அபார வெற்றிபெற்றுள்ளார். ஸ்டாவஞ்சரில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களுடன்  விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 5 புள்ளி 5 புள்ளிகளுடன் நார்வே தொடரில் பிரக்ஞானந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் கார்ல்சனை தன் சொந்த மண்ணில் கிளாசிகல் போட்டியில் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

Night
Day