குஜராத் அணியை வீழ்த்திய சென்னை அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இறங்கிய சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

Night
Day