குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பிரபல ஹெவிவெய்ட் குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார். அவருக்கு வயது 76. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 1968-ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மேலும், 21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். 1974-ம் ஆண்டு நடந்த பிரபலமான ரம்பிள் இன் தி ஜங்கிள் சண்டையில் முகமது அலியிடம் தோல்வியை தழுவினார். ஆனால் தொழில்முறை குத்துச்சண்டையில் 68 நாக் அவுட்கள் உட்பட 76 வெற்றிகளைப் பெற்ற வியத்தகு பெருமைக்குச் சொந்தக்காரர் ஃபோர்மேன். இது, முகமது அலியின் வெற்றியை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும். 1997-ம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Night
Day