குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் : 13 புள்ளியுடன் மராத்தி வல்ச்சர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் நடைபெற்ற குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மராத்தி வல்ச்சர்ஸ் ஆண்கள் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குருகிராம் பல்கலையில் நடைபெற்ற முதல் போட்டியில், தமிழ் லயன்ஸ் அணி, 35-க்கு 33 என்ற கணக்கில் போஜ்புரி லெப்பர்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பஞ்சாபி டைகர்ஸ் அணி, தெலுங்கு பாந்தர்ஸ் அணியை 47-க்கு 39 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதே போன்று மூன்றாவது போட்டியில், மராத்தி வல்ச்சல்ஸ் அணி, ஹரியான்வி ஷார்க்ஸ் அணியை 52-க்கு 32 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றிகளின் மூலம் மராத்தி வல்ச்சர்ஸ் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திலும், பஞ்சாபி டைகர்ஸ் 12 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், தமிழ் லயன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

Night
Day