கேரம் உலகச் சாம்பியன் ஹாசிமாவை நேரில் அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளம் கேரம் மேதை ஹாசிமா எம். பாஷாவை சந்தித்து சிறப்பித்ததில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை இளம் வயதிலேயே இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற அவரது ஊக்கமளிக்கும் பயணமும், சிறந்த சாதனைகளும், வளர்ந்து வரும் இளைஞர் சக்திக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகவும், பல்வேறு விளையாட்டுகளில் நமது தேசத்தை உலகத் தலைவராக முன்னெடுத்து வருவதாகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசிமா எம். பாஷா தொடர்ந்து பிரகாசித்து, தேசத்துக்கு மென்மேலும் பல பெருமைகளை பெற்றுத் தரட்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்தியதாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day