சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டிம் சவுதி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.


இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடருடன், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஹாமில்டனில் இன்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், நியூசிலாந்து வீரர்கள் அவரை வெற்றியுடன் வழியனுப்பி வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அவர், நம்பமுடியாத தனது கிரிக்கெட் பயணத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். கடந்த 2008ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமான டிம் சவுதி, 104 டெஸ்ட் போட்டிகளிலும், 161 ஒரு நாள் போட்டிகளிலும், 125 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

Night
Day