சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் வங்கதேச வீரர் மெஹ்முதுல்லா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச போட்டிகளில் இருந்து வங்கதேச வீரர் மெஹ்முதுல்லா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது சமூக  தளங்களில் அறிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் பயணம் முழுவதும் தன்னை ஆதரித்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்

Night
Day