சாம்பியன்ஸ் கோப்பையை 3-வது முறையாக வென்று வரலாற்று சாதனை - இந்திய கிரிக்கெட் அணிக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள பதிவில், துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளதற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளதோடு, சாம்பியன்ஸ் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையையும் படைத்து இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

இந்திய அணி வீரர்கள் மென்மேலும் பல்வேறு வியத்தகு சாதனைகளை நிகழ்த்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day