சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் துவங்குமா இந்திய அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. 

8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளம் மெதுவானதாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முதல் ஆட்டத்திலேயே வென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிகரமாக தொடங்க, இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day