சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி அசத்தி உள்ளது. 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

துபாயில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக, மிட்செல் 63 ரன்னும், பிரேஸ்வெல் 53 ரன்னும் எடுத்த நிலையில், இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

சுப்மன் கில் 31 ரன்னில் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் வெளியேறிது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மா, 76 ரன்னில் அவுட்டான நிலையில், அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் 48 ரன்னில் ஸ்ரேயஸ் ஐயரும், 29 ரன்னில் அக்ஷர் படேலும் வெளியேறினர். இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இதன்மூலம் 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இந்திய அணி அசத்தி உள்ளது. 

Night
Day