சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு லக்ஷயா சென் முன்னேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் 2வது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 


ஷென்ஜென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவை சேர்ந்த லீ ஜி ஜியாவுடன் மோதினார். இந்த போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், 21க்கு 14, 13க்கு 21, 21க்கு 13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் லீயிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துள்ளார்.

Night
Day