சூப்பர் 8 சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்றது ஆஸ்திரேலியா அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பையில் நமீபியா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு 2வது அணியாக தகுதி பெற்றது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இத்தொடரின் 24வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய, நமீபியா அணி 17 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5.4 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், குரூப்-பி பிரிவில் 3 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றியுள்ளது. ஏற்கெனவே, குரூப்-டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Night
Day