எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி, கடைசி 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 2 போட்டிகளை சந்தித்துள்ள டெல்லி அணி, அவற்றில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டி தோல்வியில் இருந்து மீளும் முனைப்பில் சென்னை அணியும், ஹட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணியும் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 முப்பது மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
இதனிடையே சென்னை கேப்டன் ருதுராஜூக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்றும், எனவே இன்றைய போட்டியை தோனி வழிநடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே பஞ்சாப் மாநிலம் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 முப்பது மணிக்கு நடைபெற உள்ளது.