சென்னை- மும்பை போட்டிக்கு முன்பு அனிருத் இசை நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் சீசன் இன்று தொடங்குகிறது. இப்போட்டிகள் மே 25-ந் தேதி வரை சுமார் 10 வாரங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சென்னை - மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

varient
Night
Day