சென்னை: மொய்தாய் குத்துச்சண்டையில் 9 தங்க பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக மொய்தாய் குத்துச்சண்டை போட்டியில் 9 தங்க பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை உலக அளவிலான மொய்தாய் குத்துச்சண்டை போட்டி, தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டேலாவில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் பங்கேற்ற நிலையில் 9 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் உலகளவிலான மொய்தாய் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பெல்டையும் தமிழக வீரர்கள் பெற்றனர். இதையடுத்து விமானம் மூலம் சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Night
Day