செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை

எழுத்தின் அளவு: அ+ அ-


செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்ற ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வந்தன. பத்து சுற்றுகள் முடிவில் 19 புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதனையடுத்து இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தங்கம் வென்றது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
   

Night
Day