எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆடவர் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவர் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 183 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய ஆடவர் பிரிவில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதனிடையே 10வது சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 2.5 - 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி தலா ஒரு புள்ளிகளையும், விதித் பூஜ்ஜியம் புள்ளி 5 புள்ளிகளை பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பதுடன் தங்க பதக்கத்தையும் உறுதி செய்துள்ளது.