செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். உலக செஸ் சம்மேளனம் ஃபிடே வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2 ஆயிரத்து 833 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2 ஆயிரத்து 802 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் தொடர்கின்றனர். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னையை சேர்ந்த குகேஷ் 2 ஆயிரத்து 787 புள்ளிகளுடன் இரண்டு இடம் முன்னேற்றம் கண்டு 3வது இடத்தைப் பிடித்துள்ளார். புள்ளிப்பட்டியலில் இது அவருடைய சிறந்த தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2 ஆயிரத்து 758 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 

Night
Day