ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறுவதை இந்தியா விரும்பவில்லை - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறுவதை இந்தியா விரும்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. 

பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குகிறது. இதில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வழக்கமாக அணிகளின் ஜெர்சியில் தொடரை நடத்தும் நாட்டின் பெயர் இடம்பெற்றிருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஜெர்சியில் தங்களது நாட்டின் பெயர் இடம்பெறுவதை பிசிசிஐ விரும்பவில்லை என குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்டில் பிசிசிஐ அரசியல் செய்வதாகவும், இது விளையாட்டுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளது.

Night
Day