டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் 2வது இடம் பிடித்த இந்தியாவின் குகேஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் குகேஷ் 2வது இடம் பிடித்தார். டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி சுற்று பிரிவில் குகேஷ், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சீனாவின் வெய் யி உள்ளிட்டோர் முதலிடத்தில் இருந்தனர். அதனை தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பிரேக்கர் பைனலில் சீனாவின் வெய் யி 1.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் ஆனார். குகேஷ் 0.5 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை பிடித்தார். சேலஞ்சர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் லியோன் லூக் 9.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

Night
Day