டி.என்.பி.எல். - திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக்கம் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக்கம் அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சேப்பாக்கம் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 198 ரன்களை எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, சேப்பாக்கம் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வென்றது.

Night
Day