டி.20 போட்டிகளில் உலக சாதனை படைத்த பாபர் ஆசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

பாகிஸ்தானில் நடைபெற்ற டி.20 சூப்பர் லீக் போட்டியில், பெஷாவர் ஷல்மி அணியின் கேப்டனான பாபர் ஆசம், டி.20 போட்டிகளில் 10ஆயிரம் ரன்களை கடந்தார். கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான டி.20 போட்டியின் போது 10ஆயிரம் ரன்களை கடந்து மேற்கு இந்திய வீரர் கிரிஸ் கெய்லின் சாதனையை பாபர் ஆசம் முறியடித்தார். 285 டி. 20 இன்னிங்ஸ்களில் கிரிஸ் கெய்ல் 10ஆயிரம் ரன்களை கடந்த நிலையில் பாபர் ஆசம் 271 இன்னிங்ஸ்களிலேயே 10ஆயிரம் ரன்களை கடந்து மிகப்பெரிய உலக சாதனையை படைத்துள்ளார். 299 இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரரான விராட் கோலியும் 10ஆயிரம் ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day