டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு - ஹைடன் அதிருப்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்த்திக் பாண்டியா இடம்பெற்றது எப்படி என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருப்பதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபில் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவும் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்து. இந்திய அணியின் தேர்வால் அதிருப்தி அடைந்த மேத்யூ ஹைடன், ஹர்திக் பாண்டியா தனது விளையாட்டு திறமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

Night
Day