டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியிடம் நியூசிலாந்து அணி படுதோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியிடம் நியூசிலாந்து அணி படுதோல்வியடைந்தது.


மேற்கு இந்திய தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால், வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள், ஆப்கானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 15.2 ஓவர்களில் 75 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், ஃபரூக்கி அபாரமாக பந்து வீசி தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.

Night
Day