டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - வங்கதேசம் அணிக்கான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 19ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்தியாவின் ஆல்ரவுண்டர் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து  முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் அணி, 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 

227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 64 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் விளாசினர். இதையடுத்து 515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற 4ம் நாள் ஆட்டத்தில், அஸ்வின் சுழலில் சிக்கி வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியில் வங்கதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 2வது இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியை அடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Night
Day