தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்‍கு , மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேல் ரத்னா பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மனு பாக்கர், ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருதுகளை  மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த விருதுகளை வருகிற 17 ம் தேதி காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், 4 பேருக்‍கும் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

Night
Day