தமிழ்நாடு பள்ளிகள் அளவில் ஹாக்கி விளையாட்டு தொடர் தொடக்க விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு பள்ளிகள் அளவிலான ஹாக்கி விளையாட்டு தொடரின் தொடக்க விழா, சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடர் இன்று முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே 38 மாவட்டங்கள் அளவில் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கான ஹாக்கி விளையாட்டு தொடரில், வெற்றி பெற்ற மாணவர்களை 6 மண்டலங்களாக ஒருங்கிணைத்து, இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சாய்ராம் கல்லூரியின் தலைவர் பிரகாஷ் லியோ முத்து, தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜ் குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்பித்தனர். வெற்றி பெறும் அணிக்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி கோப்பைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Night
Day