எழுத்தின் அளவு: அ+ அ- அ
துபாய் 24H கார் பந்தய தொடரில் விபத்துக்குப் பின் அஜித் கார் ஓட்டி வரும் Razoon அணி, GT4 பிரிவில் டாப் 5 இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், 992 பிரிவில் அஜித்குமார் ரேசிங் அணியும் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
துபாயில் 24H கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித் கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது, பயிற்சியில் அவரது கார் விபத்துக்குள்ளானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், 24H கார் பந்தயம் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், Razoon அணிக்காக கார் ஓட்டி வரும் அஜித்தின் அணி GT4 பிரிவில் டாப் 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே போல், 992 பிரிவில் அஜித்குமாரின் ரேசிங் அணியும் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று பிற்பகல் போட்டி முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜித் அணி வெற்றி வாகை சூடுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.