நான் வெற்றி பெற்றதற்கு என் தந்தை, தாய் மிக முக்கிய காரணம் - துளசிமதி முருகேசன் நெகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

அர்ஜுனா விருது வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
 
கடந்தாண்டு பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. இது குறித்து நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தருணம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், விருதை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Night
Day