நாளை தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்பதாவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை 27 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகின்றன. தொடர்ந்து அரை இறுதி போட்டிகள் டிரினிடாட் அன்ட் டோபாகோ மற்றும் கயானாவிலும் இறுதிப்போட்டி பார்படாஸில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இதில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் கனடா அணியும் மோதுகின்றன.

Night
Day