நியூசிலாந்துக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்துக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3ஆவது போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறிய நியூசிலாந்து அணி இறுதியில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 233 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமடித்தார். இறுதியில் 44.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது . 



Night
Day