நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூசிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் அனைத்து வடிவிலான அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேன் வில்லியம்சன், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் சான்ட்னர் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் டி20 அணியின் முழு நேர கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Night
Day