பஜ்ரங் புனியா 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, கடந்த மார்ச் மாதம் தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ள தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு, இக்காலத்தில் போட்டிகளில் பங்கேற்கவோ, மல்யுத்த பயிற்சி அளிக்கவோ கூடாது என தெரிவித்துள்ளது.

Night
Day