பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அணியின் பயிற்சியாளரை பஞ்சாப் மாநில அரசு கைது செய்துள்ளதாக வரும் செய்திகள் வேதனை அளிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு ஆளான தமிழக கபடி வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என விளம்பர திமுக அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த கபடி வீராங்கனைகள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். தமிழக அணியின் பயிற்சியாளரை பஞ்சாப் மாநில அரசு கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன - இது மிகவும் வேதனையளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப்பில் இன்று நடைபெற்ற கபடி போட்டியின் போது போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு இருந்த பஞ்சாப் கபடி வீராங்கனைகள், போட்டியின் நடுவர் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோர் தமிழக வீராங்கனைகளை கொடூரமாக தாக்கியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது - இது வன்மையாக கண்டிக்கத்தக்கது - பஞ்சாப் மாநில அரசு தமிழக வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது - இந்த அநாகரீகமான செயலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் மாநில அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு ஆளான தமிழக கபடி வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.