பாகிஸ்தானுக்கு மரண பயத்தை காட்டிய அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்க அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய அமெரிக்கா அணி தொடக்க வீரரான ஸ்டீவன் டெய்லர் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் மோனக் படேல், ஆண்ட்ரிஸ் கௌஸ் ஜோடி சிறப்பாக விளையாடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அமெரிக்க அணி 14 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 19 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Night
Day