பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் துவக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நேற்று துவங்கியது. கராச்சியில்  நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 118 ரன்களும், வில் யங் 107 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 47.2வது ஓவரில் 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

Night
Day