பாகிஸ்தான் டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி ராஜினாமா - இடைக்கால பயிற்சியாளராக அகிப் ஜாவித் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லெஸ்பி ராஜினாமா செய்துள்ளார். 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி நேற்று புறப்படவிருந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கில்லெஸ்பி அறிவித்தார். உதவி பயிற்சியாளர் டிம் நீல்சனின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதுப்பிக்க மறுத்ததால்,  கில்லெஸ்பி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக உள்ள அகிப் ஜாவித், டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Night
Day