பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் பங்கேற்ற துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், தனிநர் 10 மீட்டர் ஏர் ரைபில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்றிலும் வெற்றிவாகை சூடி மூன்றாவது பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு பாக்கர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மனுபாக்கர், வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day