பாரிஸ் ஒலிம்பிக் - இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெற்றுத் தந்தார். இதன் மூலம் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். மற்ற போட்டிகளில் பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துடுப்பு படகு போட்டியில் பல்ராஜ் பன்வார், டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுலா, துப்பாக்கி சுடுதலில் அர்ஜுன் பபுடா ஆகியோர் அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியின் இந்தியா தனது பதக்க வேட்டையை துவங்கியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று, பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்தார். 

Night
Day