பாரிஸ் ஒலிம்பிக் - ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றியுள்ள நீரஜ் சோப்ராவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷ்த் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தையும் தட்டிச்சென்றார். தொடர்ந்து, 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். 88.54 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கு, முன்னதாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி நீரம் சோப்ரா தங்கம் வென்றிருந்தார். இந்தாண்டு, ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி, நான்கு வெண்கம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Night
Day