எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஈரான் வீரர் பெயிட் சட்ஹித் 47.64 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி 2ம் இடம் பிடித்தார். ஆனால், முதல் இடம் பிடித்த வீரர் பெயிட் சட்ஹித் போட்டி விதிகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கணை சிம்ரன் சர்மா அவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்நிலையில், பதக்கப்பட்டியலில், சீனா 216 பதக்கங்களுடன் முதலிடத்திலும், பிரிட்டன் 120 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும், அமெரிக்கா 102 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.