பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


பிரெஞ்சு ஓபன் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வெரேவ் ஆரம்பம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார். இதன்மூலம் 2க்கு6, 6க்கு 2, 6க்கு 4 மற்றும் 6க்கு 2 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஸ்வெரேவ், கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளனர்.

Night
Day