பிரைம் வாலிபால் தொடரின் சூப்பர் 5 சுற்று போட்டிகள் : மும்பை, கோழிக்கோடு அணிகள் வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரைம் வாலிபால் தொடரின் சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் அகமதாபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி பிரைம் வாலிபால் தொடர் தொடங்கியது. நேற்று நடைபெற்ற சூப்பர் 5 சுற்று ஆட்டத்தில் மும்பை மீட்டியார்ஸ் அணி, அகமதாபாத் டிபன்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 15க்கு 8, 13க்கு 15, 7க்கு 15, 16க்கு 14, 15க்கு 13 என்ற புள்ளி கணக்கில் அகமதாபாத் அணியை தோற்கடித்து மும்பை அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் அணியை வீழ்த்தி கோழிக்கோடு ஹீரோஸ் அணி வெற்றிபெற்றது. 

Night
Day