பி.வி.சிந்துவுக்கு டும்.. டும்.. டும்... அமைச்சர் வெளியிட்ட புகைப்படத்தால் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்ற முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி. சிந்து-வெங்கட தத்தா சாய் திருமணம் உதய்ப்பூரில்  நடைபெற்றது. 

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய். இவர் போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். டிசம்பர் 22 ஆம் தேதி உதய்ப்பூரில் இவர்களது திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். பி.வி. சிந்து-வெங்கட தத்தா சாய் திருமணத்திற்கு அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

varient
Night
Day