புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. 10வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த, தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் என 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 32 - 25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. 

Night
Day