எழுத்தின் அளவு: அ+ அ- அ
புரோ கபடி லீக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 10வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்றைய முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி, 28-28 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதனையடுத்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 50 - 34 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வென்றது.