பெங்களூருவைப் பந்தாடி வெற்றி பெற்ற ராஜஸ்தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் காட்மோர் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் டாம் கோலர் காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 45 கேட்ச் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்

varient
Night
Day