விளையாட்டு
உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
சென்னை-கொல்கத்தா இடையிலான ஆட்டத்தில், தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல், காதுகளை மூடிக் கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 138 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய சென்னை அணிக்கு 23 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 5 ஆவது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், விண்ணைப் பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டும், கரகோஷம் எழுப்பியும் ஆர்ப்பரித்தனர். 125 டெசிபல் அளவுக்கு எழுப்பப்பட்ட சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கொல்கத்தா வீரர் ரஸ்ஸல், தன்னுடைய காதுகளை மூடிக்கொண்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்?...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...