மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி - சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா அணி, சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் மோதியது. விறு, விறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. இந்திய அணி சார்பில் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்றினார். இதனையடுத்து இந்திய அணி  3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக தென்கொரியா அணியும் மூன்று முறை மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day